மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பொதுமக்களால்தன்னெழுச்சியாகஇடப்பட்டஇரண்டு கோடியே ஐந்து லட்சம் கையெழுத்துகள் இடப்பட்ட பதிவேடுகள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் எதிர்விளைவுகளைக் கண்டு அஞ்சுவதுதான்.