தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 15ஆவது முறையாக பரோல் நிராகரிப்பு!

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு, 15ஆவது முறையாக பரோல் கோரிக்கையை நிராகரித்து சிறைத் துறை உத்தரவிட்டுள்ளது.

rajiv gandhi
rajiv gandhi

By

Published : Jun 17, 2020, 9:42 PM IST

மதுரை சிறையில் கரோனா வைரஸ் தொற்று, சிறைவாசிகளிடம் பரவி வருவதால் மூன்று மாதம் பரோல் விடுப்பு கேட்டு ரவிச்சந்திரனின் தாயார், சிறைத் துறையினரிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரது கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்ற ரவி. இவர் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

ரவிச்சந்திரனின் தாயார், தனது மகனை பரோலில் விடுதலை செய்யக்கோரி சிறைத் துறைக்கு இதுவரை அனுப்பிய 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, மதுரை, கடலூர், பாளையங்கோட்டை, திருச்சி சிறைகளில் உள்ள சில கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானதையடுத்து, ரவிச்சந்திரனை 3 மாதம் பரோலில் விடுவிக்கக்கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு, கடந்த மே 29ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார்.

தற்போது, இந்த விண்ணப்பத்தை நிராகரித்து, சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கீழடி : அகரம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டு தங்க நாணயம்!

ABOUT THE AUTHOR

...view details