பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "1971ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாடு ஒன்றில் நடந்ததாக ரஜினி கூறியுள்ளார். எப்பொழுதுமே ரஜினி செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பார். பெரியார் பற்றிய பேச்சை ரஜினி தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் பெரியார் என்பவர் பகுத்தறிவு பகலவன்.
எங்கள் கருத்துகளுக்கு வழிகாட்டி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளைக் கொண்ட அவரது சிலைக்கு அவமரியாதை செய்வது, சகித்துக்கொள்ள முடியாது. அவமரியாதை செய்பவர்கள் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். பெரியாரின் சிலையை அவமரியாதை செய்தது காட்டுமிராண்டித்தனமான செயல். அவரது சிலைக்கு அவமரியாதை செய்பவர்களைக் கடுமையான சட்டத்தைக் கொண்டும் குறைந்தபட்சம் குண்டர் சட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.