தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை எப்போது அறிவிக்கலாம் என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதலமைச்சர் பதவியை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் முன்னதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் எப்போது தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.