தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தன் வீட்டையே ரஜினி அருங்காட்சியமாக மாற்றிய மதுரை ஓவியர்! - ரஜினிகாந்த் எழுபதாவது பிறந்த நாள்

மதுரை : தன் வீட்டையே ரஜினி அருங்காட்சியமாக மாற்றிய மதுரை ஓவியரை ரஜினி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

rajini-birthday-house-painting
rajini-birthday-house-painting

By

Published : Dec 12, 2019, 9:02 PM IST

இன்று நடிகர் ரஜினிகாந்த் எழுபதாவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். அதனையொட்டி மதுரையைச் சேர்ந்த ஓவியர் சுந்தர் தனது வீட்டை ரஜினி அருங்காட்சியகமாக இன்று மாற்றியுள்ளார். மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர் இவர் சுவர்களில் ஓவியம் வரையும் தொழில் செய்துவருகிறார்.

இவர் ஐந்தாவது வயதில் பள்ளியில் ஓவிய போட்டியில் கலந்துகொள்ளும் போது இவர் வரைந்த முதல் ஓவியம் ரஜினி படம் ஆகும். அதனால்தான் என்னவோ ரஜினி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 40 வயதான சுந்தர் அதிகமாக வரைந்த ஓவியங்கள் ரஜினி ஓவியங்களே.

தன் வீட்டையே ரஜினி அருங்காட்சியமாக மாற்றிய மதுரை ஓவியர்

பொது சுவர்களில் ஓவியங்களாக இருந்த ரஜினியின் படங்களை தனது வீட்டில் வரைய வேண்டும் என்ற ஆசை எழுந்து, தான் குடியிருக்கும் வீட்டில் அபூர்வராகங்கள் முதல் தர்பார் வரை ரஜினியின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார். ரஜினிக்காக தான் வசிக்கும் வீட்டையே ரஜினியின் ஓவிய அருங்காட்சியகமாக மாற்றியுள்ள சுந்தரை ரஜினி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஓவியர் சுந்தர் இதுகுறித்து கூறும்போது

மதுரையில் அதிக ஓவியர்கள் இருந்தாலும் ரஜினியின் புகைப்படங்களை பார்க்காமலேயே ரஜினியை தத்துரூபமாக வரைவது சுந்தரின் தனித்தன்மையாகும். இப்படி ஒரு தீவிர ரசிகனுக்கு ரஜினியுடன் குடும்பம் சகிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது லட்சியமாக இருக்கிறது. அந்த புகைப்படத்தை இந்த அருங்காட்சியகம் வீட்டில் வரைய வேண்டும் என்பதே இந்த ஓவியரின் கனவாக இருக்கிறது.

இதையும் படிங்க:

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்த ரஜினி ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details