மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை என்ற கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டிக்கும் விதமாக ரயில்வே ஊழியர்கள் நூதன முறையில் எதிர்ப்பு - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரை: திருமங்கலம் அருகே ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டிக்கும் விதமாக இரவு நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து நூதன முறையில் அதன் ஊழியர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
![ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டிக்கும் விதமாக ரயில்வே ஊழியர்கள் நூதன முறையில் எதிர்ப்பு ரயில்வே துறை தனியார் மயமாக்குவதை கண்டிக்கும் விதமாக ரயில்வே ஊழியர்கள் நூதன முறையில் எதிர்ப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:52:28:1600672948-tn-mdu-01-thirumangalam-railway-protest-script-visual-20092020110858-2009f-1600580338-81.jpg)
ரயில்வே துறை தனியார் மயமாக்குவதை கண்டிக்கும் விதமாக ரயில்வே ஊழியர்கள் நூதன முறையில் எதிர்ப்பு
இன்னும் சில இளைஞர்கள் ரயில்வே தேர்வில் தேர்வாகி பணிக்குச் செல்ல உள்ளனர். தற்போது மத்திய மாநில அரசுகள் ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கிறது.
இதனை கண்டிக்கும் விதமாக கிராமத்திலுள்ள ரயில்வே ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று (செப்டம்பர் 20) இரவு அரை மணி நேரம் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.