மதுரை: ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கையை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், எஸ்.ஆர்.இ.எஸ்., என்.எஃப்.ஐ.ஆர். ஆகிய தொழிற்சங்கங்கங்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் எஸ்.ஆர்.இ.எஸ். சங்கப் பொதுச்செயலாளர் சூரிய பிரகாசம் செய்தியாளரிடம் பேசுகையில், “ரயில்வே சொத்துகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் ஒன்றிய அரசின் முயற்சியைக் கைவிட வேண்டும். எலக்ட்ரிக்கல் பிரிவை தனியார்மயமாக்குவது கூடாது.