தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் காப்பக விவகாரம்: இதயம் அறக்கட்டளைக்குச் சொந்தமான மற்றொரு அலுவலகத்தில் சோதனை - குழந்தைகள் காப்பக விவகாரம்

மதுரை: குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான மேலும் ஒரு அலுவலகத்தில் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் காப்பக விவகாரம்
குழந்தைகள் காப்பக விவகாரம்

By

Published : Jul 3, 2021, 4:33 AM IST

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள இதயம் அறக்கட்டளை, குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து மதுரை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதயம் அறக்கட்டளைக்குச் சொந்தமான கிளை அலுவலகம் ஒன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. நேற்று (ஜூலை. 2) இந்த அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேடு, ஆதரவற்றோர்கள் மீட்கப்பட்ட விவரங்கள் குறித்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த அலுவலகத்தில் சட்டவிரோதமாக ஆதரவற்றோர்களுக்கு சிகிச்சை அளிப்பது, ஊசி செலுத்துவது போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஆதரவற்றோர் மையத்தில் உள்ள ஆவணங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details