மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில், "நோயில்லாமல் பொதுமக்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா மினி கிளினிக்கை அரசு தொடங்கியுள்ளது. ஆனால் இங்கு பொதுமக்கள் வராமல் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.
அம்மா மினி கிளினிக் தொடக்கம் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக்கூடிய பகுதியில் நான்கு வழிச்சாலை போடப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு தயார்நிலையில் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசு நிலம் கொடுக்கவில்லை என தகவல்கள் பரவுகின்றன. நிலம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது.
எய்ம்ஸ் வருவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் பேச்சு கரோனா தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் தாமதமாகின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதை யாராலும் தடுக்க முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வருவாய்த்துறை ஆவணம் தயார் நிலையில் உள்ளது" என்று பேசினார்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் சன்மானம்