மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு 351 பயனாளிகளுக்கு 1.48 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
'நீர் ஆதாரங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' - ஆர்.பி. உதயகுமார் - protected
மதுரை: தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்னை இருப்பது உண்மைதான் அதற்கு தீர்வாக 262 கோடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நீர் ஆதாரங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "பருவமழை பொய்த்தால்தான் குடிநீர் பிரச்னை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகள், நீர் நிலைகள் எங்கு உள்ளன என கண்டறிந்து அங்கிருந்து நீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் 262 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு லாரிகள் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் ஏற்படும் இந்த மாற்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 500 கோடி ஒதுக்கி குடிமராமத்துப் பணிகளுக்கு ஒதுக்கி நீர் நிலைகளை பாதுகாத்து தண்ணீரை சேமிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.