மே 27, 28 ஆகிய தேதிகளில் டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் மே 29ஆம் தேதி முதல் டெல்லி, பெங்களூரு விமானங்களில் இருந்து மதுரை வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்க வேண்டும் என மதுரை சுகாதாரத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று டெல்லி, பெங்களூரு விமானங்கள் மூலம் மதுரை வந்த 160 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை செய்யப்பட்ட 160 பயணிகளும் மருத்துவ முகாம்கள், தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் வந்தப் பின்பு பயணிகள் வீடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.