தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மருத்துவமனையில் கரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் பற்றாக்குறையா...? - Corona Virus News

மதுரை: ராசாசி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு உடைகள் இல்லை என்ற குற்றச்சாட்டை மருத்துவமனை முதல்வர் சங்குமணி மறுத்துள்ளார்.

questions-raises-about-ppe-kits-for-hospital-employees-in-madurai-govt-hospital
questions-raises-about-ppe-kits-for-hospital-employees-in-madurai-govt-hospital

By

Published : Apr 16, 2020, 11:39 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக மதுரை மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் விரிவாக்க கட்டடத்திற்கு எதிரே அமைந்துள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை தற்போது கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

இன்றுவரை 41 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு உடைகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைக் கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு ஷிப்ட்-டிலும் தலா 24 பேர் என மூன்று ஷிப்ட்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 72 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இராசாசி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு

அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள் இல்லாததால் பாலிதீன் கவர்களால் ஆன உடையை அணிந்து பணியாற்றுவதாகவும், நோயாளிகளின் அருகே செல்லாமல் குறிப்பிட்ட சில அடிகள் தொலைவில் இருந்தே தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துவதாகவும் மருத்துவ பணியாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல் உடைகள் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்களும் செவிலியர்களும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்ற அச்சம் தெரிவித்ததோடு, போதுமான பாதுகாப்பு உடைகள் இல்லாததன் காரணமாகவே ஒப்பந்த பணியாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் முதல்வர் சங்குமணியை தொடர்புகொண்டு கேட்டபோது, ''மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பு உடைகள் கைவசம் உள்ளன. சொல்லப்போனால், தேவைப்படுகின்ற வேறு மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு அதிகமாகவே உள்ளன. தொற்று தடுப்பு பாதுகாப்பு உடைகள் இல்லை என்ற தகவல் மிக தவறானது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மருத்துவ கண்காணிப்பில் இருந்த 7 பேருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details