தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அழகிய கண்மாய் விற்பனைக்கு'-சுவரொட்டியால் பரபரப்பு! - Kanmai Poster issue

மதுரை: பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 'அழகிய கண்மாய் விற்பனைக்கு' என சுவரொட்டி மதுரை மாநகர் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளதை பார்த்து அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

kanmai-sales

By

Published : Jun 25, 2019, 10:42 AM IST

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள இடந்தகுளம் குளம் கண்மாய், பண்ணைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் குளம் கண்மாய் சில சமூக விரோதிகளால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அந்த ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் 'அழகிய கண்மாய் விற்பனைக்கு' உள்ளதாகவும் வீடு கட்டி உடனே குடியேறலாம், மறு விற்பனை மூலம் கோடி ரூபாய் வருமானம் பார்க்கலாம், முதலில் வருபவருக்கு முன்னுரிமை, சொந்தவீடு இல்லாதவர்களுக்கு 100 ஏழைகளுக்கு இரண்டு சென்ட் நிலம் இலவசமாக கண்மாயில் வழங்கப்படும் என சுவாரஷ்யமான வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை மதுரை மாநகர் முழுவதும் நூதன முறையில் ஒட்டியுள்ளார்.

அழகிய கண்மாய் விற்பனைக்கு

பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கண்மாய்களை விற்பனைக்கு என மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட சம்பவம் மதுரை மக்களிடமும், அரசு அலவலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details