மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க, வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.
ரஷ்ய அதிபர் வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை! - ஜல்லிக்கட்டு
மதுரை: ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் வருவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மஞ்சுவிரட்டு
இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டதற்கு, ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் வருவது குறித்தான, எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Last Updated : Oct 30, 2019, 1:17 PM IST