நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி, தான் பயின்ற பள்ளியில் தேசிய கொடியேற்றினார்.
மதுரை காளவாசல் அருகே உள்ள பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 74ஆவது ஆண்டு சுதந்திர தினவிழாவில் பள்ளியில் பயின்ற பூரண சுந்தரி இன்று (ஆக. 15) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் பேசிய பூரண சுந்தரி, “என்னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், இந்தப் பள்ளியும் இங்கு எனக்கு கற்பித்த என்னுடைய ஆசிரியர்களும்தான்.
ஆகையால், நான் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். பத்து வயதில் சிறு குழந்தையாக இந்தப் பள்ளியில் நுழைந்த நான், இன்று வெற்றி பெற்று சாதனை படைத்ததை பெருமையுடன் கருதுகிறேன். இங்கு என்னுடைய ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு அளித்த ஒத்துழைப்பை இந்த நேரத்தில் நான் எண்ணிப் பார்க்கிறேன்” என நெகிழ்ச்சிப்பட தெரிவித்தார்.
தான் பயின்ற பள்ளியில் கொடி ஏற்றிய பூரண சுந்தரி ஐஏஎஸ்! பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக சுதந்திரதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பூர்ண சந்தரி ஐஏஎஸ், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் பூரண சுந்தரியை வரவேற்று பொன்னாடை போர்த்தினார்.
இதையும் படிங்க...நம்பிக்கை மனிதி: பூரண சுந்தரி ஐஏஎஸ்...!