மதுரை: புதுச்சேரி மாநில முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்க்கக்கூடிய என். ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என வேண்டி சாமி தரிசனம்செய்துள்ளேன்.