மதுரை திருமங்கலத்தில் உள்ள பயணியர் விடுதியில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை, வேளாண் இயந்திரமயமாக்கல் இயக்கம் சார்பில் 2020 - 21ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 14 முறை பேரிடர் மேலாண்மை குழுவுடன், 9 முறை மாவட்ட ஆட்சியர்களுடன், 11 முறை தலைமை செயலாளருடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். அந்த வகையில், இந்தியாவிலேயே அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.