மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்குக்கு செல்வதற்காக திருப்பரங்குன்றம், தியாகராஜர் கல்லூரி பின்புறம் வழியாக செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குப்பை லாரி ஓட்டுநர்கள் அவ்வழியை பயன்படுத்தாமல் டீசலை மிச்சப்படுத்த, முத்துப்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சுமார் 4 கிலோமீட்டருக்கான டீசல் மிச்சப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதனை அவனியாபுரம் சாலையில் செல்லும் வழியில் லாரியை நிறுத்தி டீசலை ஓட்டுநர்களே திருடி, அதே பகுதியில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக முத்துப்பட்டி சாலையானது 16 அடி மட்டுமே உள்ள குறுகிய சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பள்ளி மாணவர்களுக்கான பேருந்துகளும் வந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றது.