தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வகுப்பறைகளை "கட்" அடித்து இருக்கிறேன்... வாசிப்பை கைவிட்டதே இல்லை” - பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த தமிழ்நாடு நிதியமைச்சர், தான் வகுப்பறைகளை கட் அடித்து இருந்தாலும், புத்தக வாசிப்பை கைவிட்டதில்லை என தெரிவித்தார்.

ptr palanivel thiagarajan  book fair in madurai  book fair  ptr inaugurate book fair  தமிழ்நாடு நிதியமைச்சர்  புத்தகத் திருவிழா  புத்தகத் திருவிழா 2022  மதுரை புத்தகத் திருவிழா 2022  பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்  உலக நடப்புகள்  அரசியல் நிகழ்வுகள்  பொருளாதார மாற்றங்கள்
நிதியமைச்சர்

By

Published : Sep 24, 2022, 7:18 AM IST

மதுரை:தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக 'புத்தகத் திருவிழா 2022' தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், குத்து விளக்கு ஏற்றி புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, அனைவருக்கும் கல்வி, சம வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் நலனை தலையாய கடமையாகக் கொண்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் அரசு நிதியுதவியுடன் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) மூலம் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் அரசு அமைப்புகளின் ஒருங்கிணைப்போடு அரசு நிதியுதவியுடன் சிறப்பாக நடத்தப்படுகிறது.

நிதியமைச்சர் பேச்சு

மதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழா குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்ட அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பள்ளி கல்லூரி காலங்களில் வகுப்பறைகளை "கட்" அடித்து இருந்தாலும், புத்தக வாசிப்பு பழக்கத்தை கைவிட்டதே இல்லை. இரண்டு புத்தகங்களையாவது படித்து விடுவேன். கடந்த முறை புத்தக கண்காட்சி நடைபெற்ற போது 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை விரும்பி வாங்கினேன். மறுபடியும் இந்த கண்காட்சியினை விரிவாக பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிட ஆவலாக உள்ளேன்.

பாடப்புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரிய தகவல்களை கற்றறிந்து பயன்பெற முடியும். அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: டிகிரி முடித்தவர்களுக்கு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

ABOUT THE AUTHOR

...view details