தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசின் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு அனுமதி இல்லை' - sellur raju

மதுரை: தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை என்று மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ptr palanivel thiagarajan

By

Published : Aug 12, 2019, 10:17 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் இருந்து வருகிறது. மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கிற மோசமான நிலையில் அரசின் செயல்பாடு உள்ளது. அரசு நிதியின் மூலம் வழங்கப்படுகிற இந்த திட்டம் அதிமுகவின் சொந்தப்பணத்திலோ அல்லது அமைச்சர்களின் பணத்தில் தரப்படுகின்ற தயவு கிடையாது.

அரசின் திட்டத்தில் விதிமுறைகளின் படி எந்த தொகுதியில் இந்த திட்டம் நடத்தினாலும் அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அழைப்பிதழ் கொடுத்து நிகழ்ச்சியை நடத்திட வேண்டும். ஆனால் எனது தொகுதியில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கிடும் நிகழ்ச்சியில் எனக்கு அழைப்பு விடுக்காமல் அமைச்சர் செல்லூர் ராஜுவை வைத்து நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதியில் செய்யக்கூடிய பணியை என் தொகுதியில் செய்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முழுமையாக செயல்படுத்த வேண்டிய கல்வித்துறை அலுவலர்களில் முக்கியமானவர் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன். விதிமுறைகளை மீறி ஆளும் கட்சியின் அடிமை போல் செயல்படுவது வருந்தத்தக்கது. எந்த ஆட்சியும் நிரந்தரமில்லை. என்றாவது ஒருநாள் உண்மை வெளிவரும், அன்று தவறு செய்கிறவர்கள் பதில் சொல்லக்கூடிய சூழல் வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details