மதுரை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நேர்முகத் தேர்வு நிறைவுபெற்ற 1,300 சத்துணவுப் பணியாளர்கள் பணி நியமனம் நீதிமன்ற தடையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பணி நியமனம் தொடர்பான நீதிமன்ற தடை விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1,300 பேருக்கு நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சத்துணவுப் பணியாளர் வேலை; பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் இதில், பணம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்து, 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சற்று பரபரப்பாக காணப்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.