மதுரை:மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் வசித்து வருபவர், அம்சவள்ளி. இவர் தனது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன், புதியதாக மூன்று சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தும், வீட்டின் உரிமையாளரான அம்சவள்ளியை வெளியே அழைத்து அரிவாளை காட்டி மிரட்டியும் வெட்ட முயன்றுள்ளனர்.
மேலும் உடனடியாக சிசிடிவி கேமராவை அகற்றுமாறும் பெண்மணிக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அம்சவள்ளி மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.