மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக் குழு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதில், கோயிலிலுள்ள மருதரசர்களின் சிலையில் உள்ள பெயர் பலகை அகற்றப்பட்டது.
கோயிலுக்கு தானமாக கொடுத்த 1008 திருவாச்சி விளக்குகளில் உள்ள பெயர்கள் அழிக்கப்பட்டன, சித்திரை திருவிழா 6ஆம் நாள் நிகழ்ச்சியில் மருதரசர்கள் கட்டிய சேர்வைக்காரர் மண்டகப்படி பெயரையும் கட்டளை உரிமையையும் பறித்தது குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு போராட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு வந்த மற்றொரு தரப்பினர் கோயிலின் முன்பு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களையும் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும், மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வேண்டுமென்றே மருது சகோதரர்களின் வரலாற்றை மறைக்க பார்க்கிறது, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்த வில்லை என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க:இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடும் திருவிழா - இதுதான் மதுரை சம்பவம்!