மதுரை மாவட்டத்தில் மீன் மற்றும் இறைச்சி கடைகளை நாளை ஒருநாள் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தடை விதித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதுரையில் நாளை மீன், இறைச்சி கடைகளுக்குத் தடை - ஆட்சியர் உத்தரவு
மதுரை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் நாளை ஒருநாள் மீன் மற்றும் இறைச்சி கடைகளைத் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Prohibition of fish shop in madurai
மதுரை மாவட்டத்தில் தீவிரமாகி வரும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளும் நாளை (ஜூன் 21) ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கதேச கிரிக்கெட் முன்னாள் வீரருக்கு கரோனா!