தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எலி தயாரிப்பாளருக்கு பூனையாய் மாறிப்போன வடிவேலு! - நடிகர் வடிவேலு

மதுரை: நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு மீது காவல் நிலையத்தில் புகார்
நடிகர் வடிவேலு மீது காவல் நிலையத்தில் புகார்

By

Published : Jan 8, 2020, 1:59 PM IST

மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 2015ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து ‘எலி’ என்ற படத்தை தயாரித்தார்.

இந்த படத்தின் மூலம் சதீஷ்குமாருக்கு ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன், தயாரிப்பாளர் சதீஷ்குமாரின் அலுவலகத்திற்குச் சென்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

நடிகர் வடிவேலு உதவியாளர் மீது காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில் சதீஷ்குமார் சென்னைக்குச் சென்றுள்ள நேரம் பார்த்து, மணிகண்டன் உட்பட மூன்று பேர் கொண்ட கும்பல், அவரது வீட்டிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், அங்கு வந்த மேலாளர் கோவிந்தராஜனையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, கோவிந்தராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின்படி, மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகர் வடிவேலுவின் பெயரை வழக்கில் சேர்க்கவில்லை.

இதுகுறித்து தீவிர விசாரணைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டம் குறித்து ராதா ரவி சர்ச்சை பேச்சு

ABOUT THE AUTHOR

...view details