தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டில் பங்கேற்காமல் திரும்புகிறோம்: மாட்டின் உரிமையாளர்கள் வேதனை - ஜல்லிக்கட்டு சிறந்த மாடுபிடி வீரர்

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்காமல் திரும்புகிறோம். அரசியல் அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் மட்டுமே வாடிவாசலுக்குள் நுழைய முடியும் என மாட்டின் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வீடு திரும்பும் மாட்டின் உரிமையாளர்
வீடு திரும்பும் மாட்டின் உரிமையாளர்

By

Published : Jan 17, 2020, 5:18 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டி தற்போதுவரை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், வாடி வாசலுக்குள் தங்களை நுழையவிடவில்லை என்று கூறி பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த காளைமாட்டின் உரிமையாளர்கள் திரும்பிச்சென்றனர்.

இது குறித்து திருச்சியைச் சேர்ந்த காளைமாட்டின் உரிமையாளர் பாண்டி கூறுகையில், “இன்று அதிகாலை 4 மணியளவில் வாடிவாசலுக்கு பின்புறம் வரிசைப்படுத்தப்பட்டோம். எங்களது டோக்கன் 69ஆம் எண், ஆனால் தற்போது மணி 12 ஆகியுள்ளது இதுவரை எங்களால் வாடிக்குள் சென்று காளையை அவிழ்க்க முடியவில்லை.

வேதனைதெரிவிக்கும் மாட்டின் உரிமையாளர்

கடந்தாண்டு எங்களது காளை மூன்றாவது பரிசுப் பெற்றது. அந்த அடிப்படையில் உள்ளூர் குழுவினர் எங்களது காளையை கண்டிப்பாக இந்த முறை வரவேண்டும் என்று அழைப்புவிடுத்திருந்தனர். இதன் காரணமாக எங்களது மூன்று காளைகளையும் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துவந்திருந்தோம். ஆனால், வாடியில் மாட்டை அவிழ்க்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறோம்” என வேதனை தெரிவித்தார்.

ஒவ்வொரு ஜல்லிக்கட்டின்போதும் காளை மாடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் டோக்கன் வழங்கப்பட்டு அந்த வரிசையில் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை தள்ளுவாடி என்ற முறையில் அனுமதித்தது மிகத் தவறு. இதன்மூலம் அதிகாரம், அரசியல் பலம் உள்ளவர்கள் மட்டுமே தங்களது காளைகளை வாடிவாசலில் அவிழ்க்க முடிகிறது என மாட்டின் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த முத்து கூறுகையில், “இதுபோன்ற போட்டிகளுக்கு தங்களது பகுதிகளிலிருந்து காளையை அழைத்துவருவதற்கு சராசரியாக ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய்வரை செலவாகிறது. இங்கு இவர்கள் கொடுக்கும் பரிசு ஒருபோதும் அதற்கு ஈடாகாது.

வீடு திரும்பும் மாட்டின் உரிமையாளர்

ஆனாலும் தமிழர்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும், நமது சொத்தான நாட்டு மாடுகள் அழிவதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறோம். ஆனால், எங்களது மாட்டினை வாடிக்குள் விடாமல் அவமதிப்பது போன்ற நடைமுறைகளை குழுவினர் மேற்கொள்வது மிகுந்த வேதனையளிக்குறது” என்றார்.

இதையும் படிங்க: 'வாவ்... ஜல்லிக்கட்டு!' - அலங்காநல்லூரில் வியந்த வெளிநாட்டினர்

ABOUT THE AUTHOR

...view details