தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்லூரில் அழகுமுத்துகோன் சிலையா, கபடிவீரன் சிலையா? ஆட்சியர் அறிக்கல் தாக்கல்செய்ய உத்தரவு - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: அழகுமுத்துகோன் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில், கபடி வீரனின் சிலை வைக்க அனுமதியளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் யாருடைய சிலை வைக்கப்படவுள்ளது என்பது குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai
madurai

By

Published : Sep 23, 2020, 8:51 PM IST

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "இந்திய சுதந்திரத்திற்காக முதல் வித்திட்டவர் மாவீரன் அழகு முத்துகோன். அவரது முழு உருவ சிலையை மதுரை மாவட்டத்தில் வைப்பதற்கு அனுமதி கோரி 2014ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டு மதுரையில் 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இதில், செல்லூர் தத்தனேரி பாலம் இறங்கும் இடத்தில் அழகுமுத்துகோன் சிலை வைக்க அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு போக்குவரத்து நெரிசல் காரணமாக சிலை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு அமைச்சர் செல்லூர் ராஜு அதே பகுதியில் கபடி வீரரின் சிலை வைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

போக்குவரத்து நெரிசலால் அழகுமுத்துகோன் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில், தற்போது கபடி வீரனின் சிலையை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கபடி வீரனின் சிலை வைக்க தடை கோரி அதே பகுதியில் மாவீரன் அழகுமுத்துகோன் முழு உருவ சிலையை வைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கபடி வீரரின் சிலை வைப்பதற்கு அப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அப்பகுதியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சாதி தலைவர்கள் சிலை வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தும், மேலும் யாருடைய சிலை அப்பகுதியில் வைக்கப்பட உள்ளது என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் பிட்காயின் மோசடியில் சிக்கிய நைஜீரிய கும்பல் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details