மதுரையில் உள்ள தனியார் பால் பண்ணைக்கு பால் வழங்கிய பால் வியபாரிகளுக்கு பணம் கொடுக்கவேண்டியது இருந்தது. இதற்காக பால் பண்ணை ஊழியர் சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி நாகமலை புதுக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பால் பண்ணை ஊழியர்களிடம் பணம் பறிப்பு : முகவர்கள் அவதி...! - பால்
மதுரை: தனியார் பால் நிறுவனத்தில் உள்ள முகவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முகவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
1
இதணை அறிந்த மதுரையின் புறநகர்ப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியாிடம் மனு கொடுத்தனர். அதில், இந்த வருமானத்தை நம்பியிருந்த அவர்கள் தீவன பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பித் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.