மதுரை மாவட்டம் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் வேளாண் பணி செய்துவருகிறார். தனது சொந்த தேவைக்காக மதுரை செல்லூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 2019 ஜூலை 2ஆம் தேதியன்று 25 ஆயிரம் ரூபாயைக் கடனாகப் பெற்று ஆறு மாத தவணையைச் சரியாகச் செலுத்திவந்துள்ளார்.
அதன் பின்பு கரோனா காலத்தில் தவணையைச் சரிவர செலுத்த இயலவில்லை.
இந்நிலையில் தனது மகனின் மருத்துவச் செலவுக்காகத் தன்னிடம் இருந்த நகையை அடைமானம் வைத்து 40 ஆயிரம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்தார். அந்தப் பணம் முழுவதையும் ஒரே தவணையாக 2021 பிப்ரவரி 17 அன்று தனியார் நிதி நிறுவனம் பிடித்தம் செய்துள்ளது.