மதுரை மாவட்டம், சேடபட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், தன்னுடைய மனைவியுடன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமண விழாவுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் போது கணியம்பட்டி விலக்கு அருகே வழிமறித்த 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியைக் காட்டி சுமார் 32 சவரன் நகையை வழிப்பறி செய்து, கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டனர்.
வழிப்பறி கொள்ளை: 13ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை! - 13ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை
மதுரை: 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டவை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
prisoners-sentenced-to-punishment-after-13-years
இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், குமார், சன்னாசி ஆகிய 3 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க:பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் இடைநீக்கம்!