தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதி முத்து மனோ இறந்த வழக்கு - ஆவணங்களை தாக்கல் செய்த சிபிசிஐடி - Cbcid submit documents

சிபிசிஐடி போலீசார் வழக்கின் விசாரணை நிலை அறிக்கையும், வழக்கு சம்பந்தமான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

madurai
madurai

By

Published : Jul 19, 2021, 9:25 PM IST

மதுரை: பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ இறந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நிலை அறிக்கை மற்றும் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர்.

நெல்லை வாகைக்குளத்தை சேர்ந்த பாவநாசம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகன் முத்து மனோ களக்காடு போலீசாரால் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

கடந்த ஏப்ரல் 22ல் என் மகன் சக கைதிகளால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தவும், துவக்க கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், 2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையின் நிலை அறிக்கையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அரசு தரப்பில் சிபிசிஐடி போலீசார் வழக்கின் விசாரணை நிலை அறிக்கையும், வழக்கு சம்பந்தமான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க:'மீனவர்களுக்கு எதிராகச் சட்டமா? விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details