மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே மலர் சந்தை அமைந்துள்ளது. இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் பூக்களின் விலை தென் மாவட்டங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த சில நாட்களாக முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்தே காணப்பட்டன. இந்நிலையில் நாளை மறுநாள் (நவ.29) கொண்டாடப்பட உள்ள திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு அனைத்து மலர்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை விபரம்:
மதுரை மல்லி - ரூ.1,000
பிச்சி - ரூ.700
முல்லை - ரூ.800
சம்பங்கி - ரூ.150