மதுரை:கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு 11:50-க்கு வருகிறார். தொடர்ந்து 12:15 -க்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மீண்டும் 2:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் செல்கிறார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 3:20 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து விடுதியில் ஓய்வெடுத்து பின்னர் 5:45 மணிக்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் பங்கு பெறுகிறார். தொடர்ந்து 19ஆம் தேதி காலை 9:25 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.