மதுரை: பாலமேட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டுத் திருவிழா இன்று (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை ஏழு சுற்றுகளாக நடைபெற்றது. 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு இருசக்கர வாகனம் முதல் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 21 காளைகளை அடக்கி முன்னணி வீரராகத் திகழ்ந்தார். 11 காளைகளைப் பிடித்த குருவி துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா இரண்டாமிடம் பெற்றார். மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மூன்றாம் இடம்பெற்றார்.