மதுரை, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு அக் 30, 31 மற்றும் நவம்பர் 1ஆம் தேதி ஆகிய நாட்களில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கோரி காவல்துறைக்கு உத்தரவிட கோரி பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி சக்தி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜை 30ஆம் தேதி நடக்க இருப்பதால் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் ஆகையால் நிகழ்சிக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.