மதுரை: விருதுநகர்மாவட்டம், நரிக்குடியைச் சேர்ந்த மருது பாண்டியர்களின் வாரிசான மங்கை மணிவிழி நாச்சியார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள், மருதுபாண்டிய சகோதரர்கள்.
இவர்களுடைய குருபூஜை அக்டோபர் 24ஆம் தேதி வருடந்தோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில் மருது பாண்டியர்களின் வாரிசுகளான 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்கு உள்ள மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கும் அக்டோபர் 27ஆம் தேதி குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது.
மருது பாண்டியர்கள் குரு பூஜை