தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாசுதேவநல்லூரை பொது தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

madurai high court bench
madurai high court bench

By

Published : Dec 17, 2020, 10:14 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சந்திரமோகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "முள்ளிக்குளம் கிராமம் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியிலேயே உள்ளது. பல ஆண்டுகளாக வாசுதேவநல்லூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியாக உள்ளது. எஸ்சி, எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலான அளவில் இருப்பதால் அவர்களுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட இயலாத நிலை உள்ளது. ஆகவே, வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மய்யமாக சென்றால் லாரியில் தான் மோத வேண்டியிருக்கும் - முத்தரசன் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details