மதுரை: திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என 2009-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2019-ஆம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
உத்தரவை முறையாக நிறைவேற்றாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடபட்டது.