சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில், திருச்சி அருகே உள்ள திருவெரும்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட குண்டூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் விளைநிலம் இருந்தது.
இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால், இந்த விளைநிலத்தில் தற்பொழுது குடியிருப்பு மனைகளாக மாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். விளைநிலங்களை குடியிருப்பு மனைகளாக மாற்றுவதற்கு விதிமுறைகள் எதுவுமே அலுவலர்கள் கடைப்பிடிக்கவில்லை.
மேலும் விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்வதால், இதை வாங்குபவரும் ஏமாறும் நிலையுள்ளது. எனவே விளை நிலத்தை வீட்டு மனையாக மாற்ற 2018ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து நகர திட்டமிடல் ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்குி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு: முன் பிணை கோரியுள்ள நிதித்துறை உதவியாளர்!