தேவர் ஜெயந்தி விழா வருகிற 30ஆம் நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சுவரொட்டியில், "பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகுபார்த்த சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா 2021ஆம் ஆண்டில் தஞ்சை அரண்மனை பேரரசியாகப் பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களைக் காக்க ஆணையிடு! ஒற்றர் படை, போர்ப்படை, தற்கொலைப் படை, தயார் நிலையில் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.