மதுரை:பெரியார் பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராம். எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர் தான் வளர்த்து வந்த செல்லப்பறவை ஒன்று காணாமல் போனதாகவும், அதை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
பறவையின் அங்க அடையாளங்களுடன், அது தொலைந்த இடத்தையும், அவரது தொடர்பு விபரங்களையும் அதிலேயே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இது குறித்து சுப்பராம் கூறுகையில், “ஒன்றரை வருடங்களாக ஜோடியாக வளர்த்து வந்த நிலையில், பெண் பறவை மட்டும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து சென்று விட்டது.