தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு: மதுரை மக்களின் அன்பிற்கு ஏது எல்லை... - மதுரை மக்களின் அன்பிற்கு ஏது எல்லை

மதுரையில் வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்துத் தருவோருக்குச் சன்மானம் வழங்குவதாக மதுரையில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பொதுமக்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

காணாமல் போன வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ 5 ஆயிரம் பரிசு
காணாமல் போன வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ 5 ஆயிரம் பரிசு

By

Published : Feb 5, 2022, 7:15 PM IST

மதுரைஎஸ்எஸ் காலனியைச் சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் வளர்த்துவந்த நாய் ஒன்று கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு காணாமல்போனது.

இந்நிலையில் அந்த நாயைக் கண்டுபிடித்துத் தருவோருக்குச் சன்மானம் வழங்குவதாக அவர் மதுரையில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பொதுமக்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

காணாமல்போன வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு

அந்தச் சுவரொட்டியில், காக்கி நிறத்தில் உயரம் குறைந்த குட்டையான 11 வயதுடைய நாய் கழுத்தில் சிறிய மணி அணிந்திருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல்போன வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு

மேலும், அந்த நாயைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: இரண்டு கால் நாய்க்கு இன்ப வாழ்வை காட்டிய இளம் பெண்!

ABOUT THE AUTHOR

...view details