தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2019, 6:33 PM IST

ETV Bharat / state

ஓட்டுக்கு பணம் எச்சரிக்கும் சுவரொட்டி: பட்டையை கிளப்பிய இளைஞர்கள்!

மதுரை: பணம் கொடுக்கும் வேட்பாளர்களை எச்சரிக்கும் வகையில் தெருவெங்கும் சுவரொட்டிகளை ஒட்டி பட்டையைக் கிளப்பியுள்ளனர் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள்.

வேட்பாளர்களை எச்சரிக்கும் சுவரொட்டி
வேட்பாளர்களை எச்சரிக்கும் சுவரொட்டி

தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் பல்வேறு வகையில் வேட்பாளர்கள் பொது மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களில் சிலர் ஆங்காங்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை அன்போடு எச்சரித்து தெருத்தெருவாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

வேட்பாளர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகள் ஒட்டிய இளைஞர்கள்

அந்த சுவரொட்டியில் கூறியிருந்ததாவது;

ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு வென்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து எடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு யாரும் பதவிக்கு வர வேண்டாம்.

கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வரவு செலவு கணக்கு கேட்டு அறியப்பட்டு, அத்தகவல்கள் சரியானதா என தகவலறியும் உரிமைச்சட்டத்தின்படி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

வேட்பாளர்களை எச்சரிக்கும் சுவரொட்டி

ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால், ஊழல் செய்தவர் பெயர், பதவி விவரம் ஆகியவற்றை அவரது புகைப்படத்துடன் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் கம்பூர் ஊராட்சி இளைஞர்களால் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் பரபரக்கும் ரஜினி ஆதரவு போஸ்டர்கள்; நடப்பது என்ன?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details