தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் - latest tamil news

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

By

Published : Dec 28, 2022, 6:44 AM IST

Updated : Dec 28, 2022, 6:53 AM IST

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில்-திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி: தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

தாம்பரம் - திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூண்கள் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி: தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:MBBS சான்றிதழை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க உத்தரவு!

Last Updated : Dec 28, 2022, 6:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details