இந்தியா முழுவதும் கரோனா 2ஆம் அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. பிரபலங்கள் பலரும் கோவிட் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா பாதிப்பு - கரோனா 2ஆம் அலை
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொன்னார்
இந்நிலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மதுரைக்கு வந்த அவருக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு கோவிட் அறிகுறிகள் இருந்ததையடுத்து, பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது, கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.