மதுரை:தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு போஸ்டர் ஓட்டுவதில், மதுரைக்காரர்கள் எப்போதும் வித்தியாசமானவர்கள். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் அடங்காத அஜித் குரூப்ஸ், மாட்டுத்தாவணி விஜய் ரசிகர்கள் குழுவினர் தல, தளபதி படங்கள் வெளியீட்டின்போது போஸ்டர்கள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். ஒரு சில சமயங்களில் அது மோதலுக்கும் வழி வகுக்கும். அரசியல் போஸ்டர்கள் ஒட்டி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் மதுரையில் நிகழ்வது உண்டு.
அந்த வகையில், மதுரையில் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்த்து போஸ்டரில் சற்று அரசியலையும் கலந்து இருப்பது தான் சர்ச்சைக்கான காரணம். தலைமைச்செயலகம் முன்பு நடிகர் கார்த்தி நிற்பது போலவும் , வலது பக்கம் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் கருணாநிதியும் இருப்பது போலவும் படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வேகமாகப் பரவ , நடிகர் கார்த்தி மறைமுகமாக ரசிகர்கள் மூலம் அரசியலுக்கு அடி போடுகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.