தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வில் முறைகேடு: உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு - காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு

மதுரை: காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு உள்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jul 23, 2020, 5:12 PM IST

மதுரையை சேர்ந்த அசோக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 969 எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த 8.3.2019 அன்று வெளியானது. எழுத்து தேர்வு, உடல் தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தாண்டு ஜனவரி 12, 13இல் எழுத்துத் தேர்வு நடந்தது. எழுத்துத் தேர்வின் முடிவுகள் மார்ச் 16ஆம் தேதி வெளியானது. இதில் ஒரே தேர்வு மையத்திலிருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை. தேர்ச்சி பெற்றவர்களில் 144 பேர் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு தொடர்ச்சியான வரிசையான எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 969 காலி பணியிடங்களுக்கு ஒரே பயிற்சி மையத்தில் 144 பேர் தேர்வு ஆகியுள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததை போல் எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது.

இத்தேர்விலும் முகவரியை மாற்றிக் கொடுத்து வெளிமாவட்டங்களில் தேர்வு எழுதியுள்ளனர். எனவே எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இதற்காக நடந்த எழுத்துத் தேர்வு செல்லாது என அறிவித்து, புதிதாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடுகையில், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தவில்லை.

மேலும் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. எனவே நடந்து முடிந்த எஸ்.ஐ தேர்வை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் மனு குறித்து உள்துறை செயலர், தமிழ்நாடு காவல் துறை தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details