மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியைச் சேர்ந்தவர் வீரணன், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த இவர் நேற்று இரவு ஆண்டிபட்டி கணவாய் சோதனைச் சாவடியில் இரவுப் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
உசிலம்பட்டி அருகே விபத்து: காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம் - மதுரை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் விபத்தில் பலி
மதுரை: உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![உசிலம்பட்டி அருகே விபத்து: காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9482641-617-9482641-1604895138241.jpg)
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம்
அப்போது உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டி என்னும் இடத்தில் தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்துவந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.