மதுரை: எஸ்.எஸ்.காலனி பாரதியார் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர்கள் சிவகுமார் - மேரிக்குட்டி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் தனித் தனியே வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் தனது மனைவி மேரிக்குட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். எஸ் எஸ் காலனி காவல் துறையினர் சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.