தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திவந்த லாரிகள் பறிமுதல்! - மதுரையில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றி வந்த 8 லாரிகள் பறிமுதல்

மதுரை: சமயநல்லூர் அருகே போலி ஆவணம் தயாரித்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றி வந்த 8 லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆற்று மணல் கடத்திவந்த 8 லாரிகள் பறிமுதல்
ஆற்று மணல் கடத்திவந்த 8 லாரிகள் பறிமுதல்

By

Published : May 11, 2020, 11:30 AM IST

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் சமயநல்லூர் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, லாரியில் எம் சாண்ட் மணல் இருப்பதாக போலி ஆவணத்தை காட்டியுள்ளனர். மேலும், சந்தேகமடைந்த காவல் துறையினர், லாரியை சோதனை செய்ததில் 8 லாரிகளில் ஆற்று மணலை சட்டவிரோதமாக ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்றதை அறிந்தனர்.

ஆற்று மணல் கடத்திவந்த 8 லாரிகள் பறிமுதல்

இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 8 லாரிகளையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் தப்பியோடிய ஓட்டுநர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பால் வண்டியில் மணல் கடத்தல் - போலீசாரிடமிருந்து தப்பிக்க தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details